அனாதி அன்பால் அழைத்த தேவா
காருண்யத்தாலே என்னை மீட்டீர் அன்பே
ஆனந்தத்தோடே நானும் வந்தேன் அன்பே
ஆ அல்லேலூயா அல்லேலூயா
ஆ அல்லேலூயா அல்லேலூயா
என் மேல் நீர் வைத்த அன்பு
முந்தி வந்ததல்லவோ
நேசம் மரணத்திலும்
வலியதல்லவோ
ஆகையினாலே உந்தன்
அன்பு என்னை வென்றதே
வேறெந்த அன்பின் இன்பம்
நிலையற்றதல்லவோ
மேகம் போல் மாறிப்போகும்
தன்மையுள்ளதல்லவோ
ஆகையினாலே உந்தன்
அன்பை நான் நம்புவேன்
அன்பாகவேயிருக்கும்
அன்பின் தேவனல்லவோ
உந்தனின் வார்த்தைகளை
யாரும் மீறலாகுமோ
ஆகையினாலே நானும்
என்றும் கீழ்படிவேன்
anathi anpal azhaiththa theva
karunyaththale ennai mittir anpe
aananthaththote nanum vanthen anpe
aa alleluya alleluya
aa alleluya alleluya
en mel nir vaiththa anpu
munthi vanthathallavo
nesam maranaththilum
valiyathallavo
aakaiyinale unthan
anpu ennai venrathe
verentha anpin inpam
nilaiyarrathallavo
mekam pol marippokum
thanmaiyullathallavo
aakaiyinale unthan
anpai nan nampuven
anpakaveyirukkum
anpin thevanallavo
unthanin varththaikalai
yarum miralakumo
aakaiyinale nanum
enrum kizhpativen