என் பாரங்கள் En parangkal

என் பாரங்கள் தாங்கிடுவார்
நாதா நீரல்லால் யாருமில்லை
என் ஜீவியம் உம் கையிலே
உம்பாண்டமாய் என்னை மாற்றிடுமே
நாதா நீரல்லால் யாருமில்லை

காலம் கடந்திடுதே
ஜீவியம் முடிவினை நெருங்கிடுதே
நாதா உம்மையே பின் செல்லவே
கிருபை வரம் தாருமே
நாதா நீரல்லால் யாருமில்லை

மாய உலகினிலே
ஓடி அலைந்து நான் தவிக்கையிலே
நாதா உந்தனின் கிருபை தந்து
அனுதினம் நடத்திடுமே
நாதா நீரல்லால் யாருமில்லை

சோர்ந்திடும் வேளையிலே
சார்ந்து நான் உந்தனில் நின்றிடவே
நாதா உந்தனின் பெலனைத் தந்து
தினந்தோறும் காத்திடுமே
நாதா நீரல்லால் யாருமில்லை


En parangkal thangkituvar
natha nirallal yarumillai
en jiviyam um kaiyile
umpantamay ennai marritume
natha nirallal yarumillai

kalam katanthituthe
jiviyam mutivinai nerungkituthe
natha ummaiye pin sellave
kirupai varam tharume
natha nirallal yarumillai

maya ulakinile
ooti alainthu nan thavikkaiyile
natha unthanin kirupai thanthu
anuthinam nataththitume
natha nirallal yarumillai

sornthitum velaiyile
sarnthu nan unthanil ninritave
natha unthanin pelanaith thanthu
thinanthorum kaththitume
natha nirallal yarumillai