ஐந்து காய வேதனை Ainthu kaya vethanai

ஐந்து காய வேதனை அன்பர்
இயேசுவை வாட்டுதே
ஆறாத சோகம் மாறாத துன்பம்
ஆண்டவர் இயேசு மேல் சூழ்ந்ததேன்

கற்றூணில் கட்டி
கசையடிகள் அடித்தனரே
தலையினிலே குத்தி அவர்
கன்னத்தில் அறைந்தனரே
சிவப்பங்கி உடுத்தி கையில்
கோலினைக் கொடுத்தனரே
யூத ராஜா என்று இகழ்ந்து
முகத்தில் காறி உமிழ்ந்தனரே

மன்னவர் இயேசு உடல்
பெரும் புண்ணாகி நொந்ததுவே
மாபெரும் இரத்த வெள்ளம்
பெருகி ஆறாகி பாய்ந்ததுவே
மானிடர் பாவம் தனை மா
தேவன் சுமந்து தீர்த்தார்
மறாவாதே நீ நெஞ்சமே மனம்
திரும்பிடு அவர் தஞ்சமே


Ainthu kaya vethanai anpar
iyesuvai vattuthe
aaratha sokam maratha thunpam
aantavar iyesu mel suzhnthathen

karrunil katti
kasaiyatikal atiththanare
thalaiyinile kuththi avar
kannaththil arainthanare
sivappangki utuththi kaiyil
kolinaik kotuththanare
yutha raja enru ikazhnthu
mukaththil kari umizhnthanare

mannavar iyesu utal
perum punnaki nonthathuve
maperum iraththa vellam
peruki aaraki paynthathuve
manitar pavam thanai ma
thevan sumanthu thirththar
maravathe ni nenysame manam
thirumpitu avar thanysame