நாடில்லா மக்களுக்கும் natilla makkalukkum

நாடில்லா மக்களுக்கும் நாடொன்று உண்டு என்னும்
ஆண்டவரின்அருளாளரின் வாக்குறுதி செயலானது அது
அருளாளர் மோசேயால் வெளியானது – நாடில்லா

ஓடோடி சென்றலையும் கோடான கோடி மக்கள்
ஒன்று கூடி வாழ ஓர் ஊர் வந்தது அந்த
ஊருக்கு கானான் என்னும் பெயர் வந்தது ஆமென்

அன்போடு அமைதி நிலை ஆண்டவர்க்கு அஞ்சும் நிலை
ஒன்றே நம் கடமை என உணர்வீர்களே அதை
ஓயாமல் சொல்லி வந்தார் சான்றோர்களே
இறைவனது புகழ் மறந்து சிலை வடித்து வணங்குகின்ற
முறை மாறி வழி காண அறிவீர்களே மோசேஸ்
குன்றேறி அதை சொன்னார் அந்நாளிலே ஆமென்

காத்திருந்த மக்களையும் கனிவான தேவனையும்
சேர்த்து வைக்கும் காலம் தான் நெருங்கி வந்தது அந்த
சிந்தனையில் எளியோரின் வாழ்விருந்தது
அருளான வாக்கு ஒன்று அழகான ஒளி மயமாய்
நிறைவாக நேரில் வரும் நாளும் வந்தது
மண்ணில் நீதி என்னும் சூரியன் வரும் வேளை வந்தது ஆமென்


natilla makkalukkum natonru untu ennum
aantavarinarulalarin vakkuruthi seyalanathu athu
arulalar moseyal veliyanathu natilla

oototi senralaiyum kotana koti makkal
onru kuti vazha oor uur vanthathu antha
uurukku kanan ennum peyar vanthathu aamen

anpotu amaithi nilai aantavarkku anysum nilai
onre nam katamai ena unarvirkale athai
ooyamal solli vanthar sanrorkale
iraivanathu pukazh maranthu silai vatiththu vanangkukinra
murai mari vazhi kana arivirkale moses
kunreri athai sonnar annalile aamen

kaththiruntha makkalaiyum kanivana thevanaiyum
serththu vaikkum kalam than nerungki vanthathu antha
sinthanaiyil eliyorin vazhvirunthathu
arulana vakku onru azhakana oli mayamay
niraivaka neril varum nalum vanthathu
mannil nithi ennum suriyan varum velai vanthathu aamen