பசும் பொன் மங்கி போனதை
தங்கங்கள் மண்ணானதே
எங்கள் தேவா மனமிரங்கும்
எங்கள் மீது மனமிரங்கும்
சிற்றின்ப மயக்கத்தினால்
சிலுவை பாதை மறந்தோம்
உலகத்தின் நேசத்தினால்
உன்னத பிரதிஷ்டை இழந்தோம்
ஆடம்பர ஆசையினால்
அர்ப்பண வாழ்வை மறந்தோம்
அதி அன்பு குறைந்ததையா
அனல் மூட்டி எழும்புமையா
நெரிந்த நாணலையும்
முறித்திடவே மாட்டீர்
மங்கி எரியும் திரியை
அணைத்திடவே மாட்டீர்
Pasum Pon Mangi Ponathy
Thangangal Mannanathy
Engal Deva Manamirangum
Engal Methu Manamirangum
Sitrinba Mayakathinal
Siluvai Paathai Maranthom
Ulagathin Nesathinal
Unatha Prathistai Ezhanthom
Adambara Asaiyinal
Arpana Vazhvai Maranthom
Adhi Anbu Kurainthaiya
Anal Muti Ezhumbumaiya
Nerintha Nanalaiyum
Murithidavea Matiner
Mangi Erium Thiriyai
Anaithidave Mater