பாரக்குருசில்‌ பரலோக Paara kurusil

பாரக்குருசில்‌ பரலோக இராஜன்‌
பாதகனைப்‌ போல்‌ தொங்குகிறாரே
பார்‌! அவரின்‌ திரு இரத்தம்‌ உன்‌
பாவங்கள்‌ போக்கிடப்‌ பாய்ந்திடுதே

வந்திடுவாய்‌ இயேசுவண்டை
வருந்தியே அழைக்கிறாரே
வாஞ்சைகள்‌ தீர்ப்பவரே – உன்‌
வாதைகள்‌ நீக்குவாரே

இருதயத்தின்‌ பாரம்‌ அறிந்து மெய்யான
இளைப்பாறுதலை அளித்திடுவாரே
இன்னுமென்ன தாமதமோ
இன்றே இரட்சிப்படைய வருவாய்

சிலுவையின்‌ மீதில்‌ சுமந்தனரே உன்‌
சாப ரோகங்கள்‌ தம்‌ சரீரத்தில்‌
சர்வ வல்ல வாக்கை நம்பி
சார்ந்து சுகம்‌ பெறவே வருவாய்‌

நித்திய வாழ்வு பெற்றிட நீயும்‌
நித்திய ஜீவ ஊற்றண்டை வாராய்‌
நீசனென்று தள்ளாதுன்னை
நீதியின்‌ பாதையில்‌ சேர்த்திடுவார்‌

இயேசுவின்‌ நாமம்‌ ஊற்றுண்ட தைலம்‌
இன்பம்‌ அவரின்‌ அதரத்தின்‌ மொழிகள்‌
இல்லையே இந்‌ நேசரைப்‌ போல்‌
இகமதில்‌ வேறோர்‌ அன்பருனக்கே


Paara kurusil paraloaga raajan
Paadhaganai poala thongugiraaray
Paar! Avarin thiru ratham un
Paavangal poakida paaindhidudhay

Vandhiduvaai Yeisuvandai
Varundhiyay alaikiraaray
Vaanjaigal theerpavaray – un
Vaadhaigal neekuvaaray

Irudhayathin paaram arindhu meiyaana
Ilaipaarudhalai alithiduvaaray
Innamumein thaamadhamo
Indray retchipadaiya varuvaai

Siluvaiyin meedhil sumandhaaray un
Saaba roagangal tham sareerathil
Sarva valla vaakai nambi
Saarndhu sugam peravay varuvaai

Nithiya vaalvu petrida neeyum
Nithiya jeeva ootrandai vaaraai
Neesanendru thallaadhunnai
Needhiyin paadhaiyil seirthiduvaar

Yeisuvin naamam ootrunda thailam
Inbam avarin adharathin moligal
Illaiyay in neisarai poal
Igamadhil veiroar anbarunakkay