பாரீர் கெத்சமனே Paareer gethsamanae

பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையே
பாவியெனக்காய் வேண்டுதல்
செய்திடும் சத்தம் தொனித்திடுதே

தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே

அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்
எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே

இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
இம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே

 மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்
முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே

அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர்
துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார்

என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தை
எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன்


Paareer gethsamanae poongaavilen naesaraiyae
Paaviyenakkaai vaendudhal
Seidhidum saththam dhoniththidudhae

Dhaegamellaam varundhi soagamadaindhavaraai
Dhaevaadhi dhaevan aega suthan padum paadugal enakkaayae 

Appaa ippaaththiramae neekkum nin siththamaanaal
Eppadiyumum siththam seieyya ennai thaththam seidhaen endraarae 

Raththaththin vaervaiyaalae meththavumae nanainthae
Immaanuvaelan ullamurugiyae vaedudhal seidhanarae

Mummurai tharai meedhae thaangonnaa vaedhanaiyaal
Munnavan thaanae veezhndhu jebiththaarae paadhagar meetpuravae

 Anbin arul mozhiyaal aarudhal alippavar
Thunba vaelaiyil thaettrvaarindriyae nondhu alarugindraar

Ennaiyum thammai poala maatrum immaa naesaththai
Enni yenniyae ullam kanindhu naan endrum pugazhndhiduvaen