பொல்லாத மனுஷன் புரிஞ்சு Pollatha manushan purinysu

பொல்லாத மனுஷன் புரிஞ்சு
கொள்ளவில்லையே நம்
நல்லாயன் இயேசுவை
அறிஞ்சு கொள்ளவில்லையே இதை

காலையில் மலர்ந்து மாலையில் உதிரும்
மலராய் வாழ்கிறான் தினம்
பூத்துக் குலுங்கி வாடிப் போகும்
பூவாய் வாழ்கிறான்
ஜீவனும் மரணமும் வாழ்வும்
தாழ்வும் தேவனின் கையிலே
எது நடந்தாலும் செய்வோம் நாமும்
தேவனின் சித்தமே

மனம் போன போக்கில் தினமொரு
திசையில் அலைந்து திரிகிறான்
பணம் பத்தும் செய்யும் என்று
பகுடி பேரி ஆணவப்படுகிறான்
செல்வம் கல்வி ஞானம் உயர்வு
தேவனின் கையிலே
உயர்த்தும் தேவனின்
கையினில் அடங்கினால்
உயர்வு நிச்சயமே


Pollatha manushan purinysu
kollavillaiye nam
nallayan iyesuvai
arinysu kollavillaiye ithai

kalaiyil malarnthu malaiyil uthirum
malaray vazhkiran thinam
puththuk kulungki vatip pokum
puvay vazhkiran
jivanum maranamum vazhvum
thazhvum thevanin kaiyile
ethu natanthalum seyvom namum
thevanin siththame

manam pona pokkil thinamoru
thisaiyil alainthu thirikiran
panam paththum seyyum enru
pakuti peri aanavappatukiran
selvam kalvi nyanam uyarvu
thevanin kaiyile
uyarththum thevanin
kaiyinil atangkinal
uyarvu nissayamE