மரித்தாலும் பிழைப்பான் Mariththalum pizhaippan

மரித்தாலும் பிழைப்பான்
அன்றோ நீதிமான்
பிழைத்தாலும் துதிப்பான் அன்றோ
தேவ தேவனை

தீங்குகள் வரும்போது தேவனை நினைத்திடு
பாடுகள் வரும்போது பரமனை பாடிடு
கண்ணீர் வரும்போது
நிரிச தசநி பநித கமததமநிச
கண்ணீர் வரும்போது
கர்த்தரை நினைத்திடு
இகமதிலே அவர் துணையை
நினைத்து நினைத்து
துதித்திட ஜெபம் வருமே

கட்டுகள் தனை அறுத்து
கவலைகள் போக்கின
நித்திய தேவனாம் நிமலனை நினைத்திடும்
சத்திய குருவான…
நிரிச…தசநி … பநித… கமததமநிச
சத்திய குருவான சரித்திர நாயகனை
துயில் எழுந்த தன்னை மறந்து
துதித்து துதித்து பாடிட ஜெயம் வருமே

ஆசீர்வாத ஊற்றுகளை
அளவின்றி திறப்பவரை
நாசியில் சுவாசம் உள்ள மட்டும் துதித்திடு
மாம்ச தேகம் உள்ள
ஆ…
மாம்ச தேகம் உள்ள
யாவருக்கும் கர்த்தர் அவர்
நல்லவரை வல்லவரை
புகழ்ந்து புகழ்ந்து
துதித்திட ஜெபம் வரும்


Mariththalum pizhaippan
anro nithiman
pizhaiththalum thuthippan anro
theva thevanai

thingkukal varumpothu thevanai ninaiththitu
patukal varumpothu paramanai patitu
kannir varumpothu
nirisathasani panitha kamathathamanisa
kannir varumpothu
karththarai ninaiththitu
ikamathile avar thunaiyai
ninaiththu ninaiththu
thuthiththita jepam varume

kattukal thanai aruththu
kavalaikal pokkina
niththiya thevanam nimalanai ninaiththitum
saththiya kuruvana
nirisathasani panitha kamathathamanisa
saththiya kuruvana sariththira nayakanai
thuyil ezhuntha thannai maranthu
thuthiththu thuthiththu patita jeyam varume

aasirvatha uurrukalai
alavinri thirappavarai
nasiyil suvasam ulla mattum thuthiththitu
mamsa thekam ulla
aa
mamsa thekam ulla
yavarukkum karththar avar
nallavarai vallavarai
pukazhnthu pukazhnthu
thuthiththita jepam varum