மறப்பேனோ மறப்பேனோ உம்மை
மறந்தும் துறந்தும் இருப்பேனோ
இருப்பேனோ… இருப்பேனோ .. நீர்
இல்லாமல் வாழ்ந்திருப்பேனோ
அது கூடாது கூடாது தேவா
நீர் இல்லாமல் வாழ்வேது நாதா – மறப்பேனோ
ஒரு தந்தை போல் சுமக்கும் தெய்வம்
உம் விந்தையை நான் மறவேன் – ஒரு
தாயைப் போல் தேற்றும் நல்தேவன்
நீரின்றி யாருண்டு தேவா
கண்மணிபோல் காக்கும் தெய்வம்
உம் காரூண்யத்தை நான் மறவேன்
மரணப் பள்ளத்தில் நான் நடந்தாலும்
நீருண்டு பயமில்லை தேவா
என் பாதம் கல்லில் இடறாமல் – என்னை
தூதர்கள் ஏந்திடுவார்- என்னை
நேசித்து போஷிக்கும் தேவன்
உம்மைப் போல் யாருண்டு தேவா
Marappeno marappeno ummai
maranthum thuranthum iruppeno
iruppeno iruppeno nir
illamal vazhnthiruppeno
athu kutathu kutathu theva
nir illamal vazhvethu natha marappeno
oru thanthai pol sumakkum theyvam
um vinthaiyai nan maraven oru
thayaip pol therrum nalthevan
nirinri yaruntu theva
kanmanipol kakkum theyvam
um karunyaththai nan maraven
maranap pallaththil nan natanthalum
niruntu payamillai theva
en patham kallil itaramal ennai
thutharkal eenthituvar- ennai
nesiththu poshikkum thevan
ummaip pol yaruntu theva