வேர்வை இரத்தாமாய் மாறிடவே vervai iraththamay maritave

வேர்வை இரத்தாமாய் மாறிடவே
வியாகுலத்தால் வேதனையில் போரிடவே
தாங்கா துயர் தனில் நீர் தனிமையிலே
தவிக்கின்ற போது சீடர்கள் உறங்கையிலே
என்ன நினைத்தீரோ என் இயேசு நாதா
உம்மை நான் நினைக்கையில் உருகுகின்றேனய்யா

பற்பல அதிசயங்களை பார்த்தறிந்தவனும்
பணப்பையை தன் தோளில் சுமந்தே திரிந்தவனும்
முப்பது வெள்ளிக்காக மோகம் கொண்டு மோசம் செய்ய
முத்தமிட்டு உம்மை காட்டிக் கொடுத்த வேளையிலே – என்ன-நினைத்தீரோ

உமக்காக ஜீவனைத் தருவேன் என்றவனும்
உன் நிமித்தன் எது வரிணும் இடரல் அடையேன் என்றவனும்
உயிருக்காய் பயம் நிறைந்து உம்மையறியேன் என்று
உமக்கு எதிரே சத்தியம் செய்திடும் வேளையிலே – என்ன
-நினைத்தீரோ

பார சிலுவை அது தோளில் அமிழ்ந்திடவே
பாதம் இடறியே நீர் பரிதவித்து சென்றிடவே
வாரினால் அடிக்கும் போது வலியினால் துடித்திடவே
யாரிடமும் சொல்லாமல் நீர் ஏங்கி தவித்திடும் வேளையிலே– என்ன நினைத்தீரோ


vervai iraththamay maritave
viyakulaththal vethanaiyil poritave
thangka thuyar thanil nir thanimaiyile
thavikkinra pothu sitarkal urangkaiyile
enna ninaiththiro en iyesu natha
ummai nan ninaikkaiyil urukukinrenayya

parpala athisayangkalai parththarinthavanum
panappaiyai than tholil sumanthe thirinthavanum
muppathu vellikkaka mokam kontu mosam seyya
muththamittu ummai kattik kotuththa velaiyile -enna
-ninaiththiro

umakkaka jivanaith tharuven enravanum
un nimiththan ethu varinum itaral ataiyen enravanum
uyirukkay payam nirainthu ummaiyariyen enru
umakku ethire saththiyam seythitum velaiyile – enna
-ninaiththiro

para siluvai athu tholil amizhnthitave
patham itariye nir parithaviththu senritave
varinal atikkum pothu valiyinal thutiththitave
yaritamum sollamal nir eengki thaviththitum velaiyile
enna ninaiththiro