- ஆ, சகோதரர் ஒன்றாய்
ஏகமான சிந்தையாய்
சஞ்சரித்தல், எத்தனை
நேர்த்தியான இனிமை.
- அது ஆரோன் சிரசில்
வார்த்துக் கீழ்வடிகையில்,
கந்தம் வீசும் எண்ணெயே,
போன்றதாயிருக்குமே.
- அது எர்மோன்மேலேயும்
சீயோன் மேடுகளிலும்
பெய்கிற ஆகாசத்து
நற்பனியைப்போன்றது.
- அங்கேதான் தயாபரர்
ஆசீர்வாதம் தருவார்,
அங்கிப்போதும் என்றைக்கும்
வாழ்வுண்டாகிப் பெருகும்.
- மேய்ப்பரே, நீர் கிருபை
செய்து, சிதறுண்டதை
மந்தையாக்கி, யாவையும்
சேர்த்தணைத்துக்கொள்ளவும்.
- எங்கள் நெஞ்சில் சகல
நற்குணங்களும் வர,
தெய்வ அன்பை அதிலே
ஊற்றும், இயேசு கிறிஸ்துவே.
- நீரே நெஞ்சை நெஞ்சுடன்
கட்டி, நேசத்தின் பலன்
நன்மை தீமை நாளிலும்
காணக் கட்டளையிடும்.
- மூன்றொன்றாகிய பிதா
மைந்தன் ஆவியும் எல்லா
நாளும் ஒருமைப்படும்
போல் இம்மந்தை ஒன்றவும்.
Aa Sagotharar Ondrai Yegamaana Lyrics in English
- aa, sakotharar ontay
aekamaana sinthaiyaay
sanjariththal, eththanai
naerththiyaana inimai.
- athu aaron sirasil
vaarththuk geelvatikaiyil,
kantham veesum ennnneyae,
pontathaayirukkumae.
- athu ermonmaelaeyum
seeyon maedukalilum
peykira aakaasaththu
narpaniyaippontathu.
- angaethaan thayaaparar
aaseervaatham tharuvaar,
angippothum entaikkum
vaalvunndaakip perukum.
- maeypparae, neer kirupai
seythu, sitharunndathai
manthaiyaakki, yaavaiyum
serththannaiththukkollavum.
- engal nenjil sakala
narkunangalum vara,
theyva anpai athilae
oottum, Yesu kiristhuvae.
- neerae nenjai nenjudan
katti, naesaththin palan
nanmai theemai naalilum
kaanak kattalaiyidum.
- moontaொntakiya pithaa
mainthan aaviyum ellaa
naalum orumaippadum
pol immanthai ontavum.
Leave a Reply
You must be logged in to post a comment.