ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் — ஆ… ஆ…
- மகிமைப்படுத்து வேனென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
கரையில்லா தேவனின் வாக்கு — ஆ… ஆ… - ஆதி நிலை எகுவோமே
ஆசீர் திரும்பப் பெறுவோம்
பாழான மண்மேடுகள் யாவும்
பாராளும் வேந்தன் மனையாகும்
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும் — ஆ… ஆ… - விடுதலை முழங்கிடுவோமே
விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
இரட்சகன் மீட்பருள்வாரே
நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
விடுதலை பெருவிழா காண்போம் — ஆ… ஆ… - யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாக தேவனருள்வார் — ஆ… ஆ…
Aanantha thuthi oli kaetkum
Aadal paadal saththamum thonikkum
Aakaaya vinnmeenaay avar janam perukum
Aanndavar vaakku palikkum — aa… aa…
- Makimaippaduththu vaenentarae
Makipanin paasam perithae
Mangaatha pukaludan vaalvom
Maatchi pettuyarnthiduvomae
Kurukida maattam kuntida maattam
Karaiyillaa thaevanin vaakku — aa… aa… - Aathi nilai ekuvomae
Aaseer thirumpap peruvom
Paalaana mannmaedukal yaavum
Paaraalum vaenthan manaiyaakum
Sirai vaalvu maraiyum seer vaalvu malarum
Seeyonin makimai thirumpum — aa… aa… - Viduthalai mulangiduvomae
Vikkinam yaavum akalum
Idukkannkal soolnthidum vaelai
Iratchakan meetparulvaarae
Nukangal murinthidum kattukal arunthidum
Viduthalai peruvilaa kaannpom — aa… aa… - Yaakkopu nadungiduvaano
Yaakkopin thaevan thunnaiyae
Amarikkai vaalvai alaippom
Aanndavar maarpil sukippom
Patharaatha vaalvum sitharaatha manamum
Parisaaka thaevanarulvaar — aa… aa…
Leave a Reply
You must be logged in to post a comment.