எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே , நீ
எந்நாளுமே துதிப்பாய் !
இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த ;
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது — எந்நாளுமே
- பாவங்கள் எத்தனையோ – நினையா திருத்தாருன்
பாவங்கள் எத்தனையோ ?
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி — எந்நாளுமே - எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை ?
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி ,
நேயமதாக ஜீவனை மீட்டதால் — எந்நாளுமே - நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே , பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை ;
உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு ,
ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால் — எந்நாளுமே - பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவே ,
பூமிக்கும் வானத்துக்கும் ;
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே , சத்திய மேயிது — எந்நாளுமே - மன்னிப்பு மாட்சிமையாம் – மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம் ;
எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே ?
எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே — எந்நாளுமே - தந்தைதன் பிள்ளைகட்கு – தயவோ டிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு ?
எந்த வேளையும் அவரோடு தங்கினால் ,
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே — எந்நாளுமே
Ennaalumae Thuthippaay Lyrics in English
ennaalumae thuthippaay – ennaaththumaavae , nee
ennaalumae thuthippaay !
innaal varaiyilae unnathanaar seytha ;
ennnnillaa nanmaikal yaavu maravaathu — ennaalumae
- paavangal eththanaiyo – ninaiyaa thiruththaarun
paavangal eththanaiyo ?
paalaana Nnoyai akattik kunamaakkip
paarinil vaiththa makaa thaya vaiennnni — ennaalumae - eththanaiyo kirupai – unnuyirkkuch seythaarae
eththanaiyo kirupai ?
niththamunaimuti soottinathumanti ,
naeyamathaaka jeevanai meettathaal — ennaalumae - nanmaiyaalun vaayai – niraiththaarae , poorththiyaay
nanmaiyaalun vaayai ;
unvayathu kalukaippol palangaொnndu ,
ongu ilamaipo laakavae seythathaal — ennaalumae - poomikkum vaanaththukkum – ulla thooram polavae ,
poomikkum vaanaththukkum ;
saami payamullavar mael avar arul
saalavum thangumae , saththiya maeyithu — ennaalumae - mannippu maatchimaiyaam – maathaevanarulum
mannippu maatchimaiyaam ;
ennnuvaayo kilakku maerkin thooramae ?
ennnnil unpaavam akantathaththooramae — ennaalumae - thanthaithan pillaikatku – thayavo tirangaano
thanthaithan pillaikatku ?
entha vaelaiyum avarodu thanginaal ,
sontham paaraattiyae thookkich sumappaarae — ennaalumae
Leave a Reply
You must be logged in to post a comment.