இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே..
இன்னும என்னில் உம் மகிமை நிரம்பனுமே.. – 2
இயேசுவே தெய்வமே உம் பாதம் அமர்ந்து நான் மகிழனுமே – 2
1. ஜீவநதியாய் எந்தன் உள்ளே
ஜீவ ஊற்றாய் புறப்படும் என்னில் – 2
கனுக்கால் அளவு போதாதையா
முழங்கால் அளவு போதாதையா – 2
கடக்கமுடியா நதியாய் என்னை
அபிஷேகித்து நடத்துமையா – 2 – இயேசுவே
2. ஜீவ நதியாய் தோன்றும் இடமே
தேவனுடைய பரிசுத்தஸ்தலமே
ஜீவ நதியாய் தோன்றும் இடமே
கர்த்தர் அமரும் சிங்காசனமே
பாயும் இடமெல்லாம் ஆரோக்கியமே
கரைகள் கனி தரும் மரங்கள் தானே – 2
இலைகள் எல்லாம் மருந்தாகுமே
கனிகள் கெடாமல் உணவாகுமே.. – 2 – இயேசுவே.
Leave a Reply
You must be logged in to post a comment.