இந்த அன்பிற்கு ஈடாய் என்ன செய்ய முடியும்
சிலுவையிலே தொங்கின
இந்த அன்பிற்கு ஈடாய் என்ன செய்ய முடியும்
நா என்ன செய்ய முடியும்-2
நான் தேடின அன்பு என்னை தேடி வந்த அன்பு
வெறுத்தோரின் மத்தியில் என்னை நேசித்த உம் அன்பு-2
- ஏன் இந்த வாழ்க்கை என இருந்த என்னை
உனக்கான வாழ்வு இதுவென மாற்றின உம் அன்பு
ஏன் இந்த உறவு என இருந்த எனக்கு
புது உறவாக வந்து எனை தேற்றின உம் அன்பு
நான் தேடின அன்பு என்னை தேடி வந்த அன்பு
வெறுத்தோரின் மத்தியில் என்னை நேசித்த உம் அன்பு
- யாரும் என்னை நம்பாத பொழுதெல்லாம்
என்மேல் நம்பிக்கை வைத்து என்னை நடத்தினது உங்க அன்பு
தகுதியற்றவன் என்று சொல்லி நகைத்தவர் முன்பே
எல்லா தகுதியும் தந்து என்னை உயர்த்தினது உம் அன்பு – இந்த அன்பிற்கு…
Leave a Reply
You must be logged in to post a comment.