- ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு
விசுவாசக் கண்ணால் காண்கிறோம்
நம்பிதா அழைக்கும்பொழுது
நாமங்கே வசிக்கச் செல்லுவோம்
இன்பராய் ஈற்றிலே
மோட்சகரையில் நாம் சந்திப்போம்
இன்பராய் ஈற்றிலே
மோட்சகரையில் நாம் சந்திப்போம்
- அந்தவான் கரையில் நாம் நின்று
விண்ணோர் கீதங்களை பாடுவோம்
துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து
சுத்தரில் ஆறுதல் அடைவோம் - நம்பிதாவின் அன்பை நினைத்து
அவரில் மகிழ்ந்து பூரிப்போம்
மீட்பின் நன்மைகளை உணர்ந்து
அவரை வணங்கித் துதிப்போம் - அந்த மோட்சகரையடைந்து
வானசேனையுடன் களிப்போம்
நம் தொல்லை யாத்திரை முடித்து
விண் கிரீடத்தை நாம் தரிப்போம் - சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில்
சந்திப்போம் ஆடுவோம் பாடுவோம்
துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில்
சேமமாய் நாம் இளைப்பாறுவோம் - அங்கே நமது ரட்சகர் என்றென்றும்
ஆளுகை செய்து வீற்றிருப்பார்
துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும்
தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார் - தூதர் சூழ்ந்து நின்று பாடுவோர்
கேட்டு நாம் யாவரும் மகிழ்வோம்
பக்தர் அங்கே முடி சூட்டுவார்
ஓர் முடி அங்குண்டு எனக்கும் - என் உற்றார் போய்விட்டார் முன் அங்கே
ஆயினும் நான் மீளவும் சந்திப்பேன்
அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே
ஒப்பற்ற பேரின்பம் கொள்ளுவேன் - ஏழைக்கும் மாளிகை அங்குண்டு
என்று நல் மீட்பர் அழைக்கிறார்
மாந்தர் யாவருக்கும் இடமுண்டு
எல்லோரும் வாருங்கள் என்கிறார்
- Jothi Thontum Or Thaesamunndu
Visuvaasak Kannnnaal Kaannkirom
Nampithaa Alaikkumpoluthu
Naamangae Vasikkach Selluvom
Inparaay Eettilae
Motchakaraiyil Naam Santhippom
Inparaay Eettilae
Motchakaraiyil Naam Santhippom
- Anthavaan Karaiyil Naam Nintu
Vinnnnor Geethangalai Paaduvom
Thukkam Yaavum Attu Makilnthu
Suththaril Aaruthal Ataivom - Nampithaavin Anpai Ninaiththu
Avaril Makilnthu Poorippom
Meetpin Nanmaikalai Unarnthu
Avarai Vanangith Thuthippom - Antha Motchakaraiyatainthu
Vaanasenaiyudan Kalippom
Nam Thollai Yaaththirai Mutiththu
Vinn Kireedaththai Naam Tharippom - Saavattar Poorikkum Thaesaththil
Santhippom Aaduvom Paaduvom
Thukkam Nnovalintha Sthalaththil
Semamaay Naam Ilaippaaruvom - Angae Namathu Ratchakar Ententum
Aalukai Seythu Veettiruppaar
Thukkam Nnoy Saavukal Neengidum
Thaevan Nam Kannnneeraith Thutaippaar - Thoothar Soolnthu Nintu Paaduvor
Kaettu Naam Yaavarum Makilvom
Pakthar Angae Muti Soottuvaar
Or Muti Angunndu Enakkum - En Uttar Poyvittar Mun Angae
Aayinum Naan Meelavum Santhippaen
Avar Koottaththil Naan Vinnnnilae
Oppatta Paerinpam Kolluvaen - Aelaikkum Maalikai Angunndu
Entu Nal Meetpar Alaikkiraar
Maanthar Yaavarukkum Idamunndu
Ellorum Vaarungal Enkiraar
Leave a Reply
You must be logged in to post a comment.