காரியத்தை(காரியங்கள்) வாய்க்கப்பண்ணும் தேவன்
இந்த ஆண்டும் என் முன்னே போவார் – 2
காரியங்கள் மாறுதலாய் முடிய
இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார் – உன் – 2
இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு
அவரே என் யுத்தங்களை செய்வார்
இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு
வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார் – 2
- கன்மலையை தடாகமாய் மாற்றி
கற்பாறை நீரூற்றாக செய்வார்-உன் – 2
அடைந்து போன ஒரு வழிக்கு பதிலாய்
ஏழு வழியை இந்த ஆண்டு திறப்பார்
ஓ .. அடைக்கப்பட்ட ஒரு வழிக்கு பதிலாய்
ஏழு வழியை இந்த நாளில் திறப்பார் – இந்த ஆண்டு… - வானத்தின் பலகணியை திறந்து
இடம் கொள்ளா ஆசிதனை தருவார் – ஓ – 2
அமுக்கி குலுக்கி சரிந்து விழ செய்து
களஞ்சியங்கள் நிரம்பி வழிய செய்வார் – ஓ – 2 – இந்த ஆண்டு… - தாமதங்கள் துரிதமாக மாறி
அற்புதங்கள் கையில் சேர செய்வார் – உன் – 2
நஷ்டப்பட்டு இழந்து போனதெல்லாம்
இந்த ஆண்டு (நாளில்) இரண்டு மடங்கு தருவார் – நீ – 2 – இந்த ஆண்டு …
காரியத்தை வாய்க்கப்பண்ணும் தேவன்
இந்த ஆண்டும் (வருஷம்) என் முன்னே போவார் -2
காரியங்கள் மாறுதலாய் முடிய
இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார்
கோணலாக தோன்றுவதை எல்லாம்
நேராக மாற்றி எனக்கு தருவார் – இந்த ஆண்டு …
Kaariyaththai(kaariyankaL) vaaykkappannum thaevan
intha aandum en munnae poavaar – 2
kaariyankaL maaruthalaai mudiya
intha aandum arputhangkaL seivaar – un – 2
intha aandu kirubaiyin aandu
avarae en yuththangalai seivaar
intha aantu magimaiyin aandu
vaakkuththaththam suthanhtharikka seivaar – 2
- Kanmalaiyai thadaakamaai maatri
karpaarai neerootraga seivaar-un- 2
adainthu pona oru vazhikku pathilaai
Yezhu vazhiyai intha aandu thirappaar
oh .. adaikkappatta oru vazhikku pathilaai
Yezhu vazhiyai intha naalil thirappaar – intha aandu … - Vaanaththin palakaniyai thiranthu
idam kollaa aasithanai tharuvaar-oh – 2
amukki kulukki sarinthu vizha cheythu
kalanjiyangal nirampi vazhiya cheyvaar-oh – 2 – intha aandu … - ThaamathangaL thurithamaaga maari
arputhangaL kaiyil chaera cheyvaar-un – 2
nashtappattu izhanthu poanathellaam
intha aandu (naalil) irandu madangu tharuvaar-nee – 2 – intha aandu …
kaariyaththai vaaykkappannum thaevan
intha aantum (varusham) en munnae poavaar – 2
kaariyangaL maaruthalaai mudiya
intha aandum arputhangal seivaar
koanalaaga thoandruuvathai ellaam
naeraaka maatrii enakku tharuvaar – intha aandu …
Leave a Reply
You must be logged in to post a comment.