கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றி கொள்வோம்
- ஜீவ தேவன் பின் செல்லுவோம்
ஜீவ ஒளிதனை கண்டடைவோம்
மனதின் காரிருள் நீங்கிடவே
மா சமாதானம் தங்கும் - உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
கண்கள் அவன் மீது வைத்திடுவார்
கருத்தாய் காத்திடுவார் - உள்ளமதின் பாரங்கள்
ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம்
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு வந்தாதரிப்பார் - அன்புமிகும் அண்ணலிவர்
அருமை இயேசுவை நெருங்குவோம்
தம்மண்டை வந்தோரைத் தள்ளிடாரே
தாங்கி அணைத்திடுவார் - நீதிமானின் சிரசின் மேல்
நித்திய ஆசிர் வந்திறங்குமே
கிருபை நன்மைகள் தொடருமே
கேட்பது கிடைக்குமே
Kartharai Nambiye Jeevippom
Kavalai Kastangal Theerndhidum
Kaividaa Kaathidum Paramanin
Karangalai Naam Patri Kolvom
- Jeeva Dhevan Pin Selluvom
Jeeva Oli Dhanai Kandadaivom
Manadhin Kaarirul Neengidave
Maa Samaadhaanam Thangum - Unmai Vazhi Nadandhidum
Uthamanukkenrum Karthar Thunai
Kangal Avar Meedhu Vaithiduvaar
Karuthaai Kaathiduvaar - Ullamadhin Baarangalai
Ookkamaai Kartharidam Solluvom
Ikkatu Nerathil Koopiduvom
Yesu Vandhaadharippaar - Anbu Mihum Annalivar
Arumai Yesuvai Nerunguvom
Thammandai Vandhorai Thallidaare
Thaangi Anaithiduvaar - Needhimanin Sirasin Mel
Nithiya Aaseer Vaadhirangume
Kirubai Nanmaihal Thodarume
Ketpadhu Kidaikkume
Leave a Reply
You must be logged in to post a comment.