நீ என்னால் மறக்கப்படுவதில்லை
உன்னை என்றும் கைவிடவே மாட்டேன்
உள்ளங்கையில் உன்னை வரைந்தேனே
எந்தன் கையில் இராஜ முடி நீயே
எந்தன் கரத்தில் அலங்கார கிரீடம்
என் சீயோனே சீயோனே
உன்னை மறப்பேனோ மறப்பதில்லை – 2
என் கையில் இருந்து ஒருவனும் உன்னை
பறிக்கவிடமாட்டேன்
தீங்கு செய்ய ஒருவனும் உன்மேல்
கை போடுவதில்லை – 2
- கர்த்தர் என்னை கைவிட்டார்
ஆண்டவர் மறந்துவிட்டார்
என்று புலம்பி சொல்லுகின்ற சீயோனே – 2
தாயானவள் பிள்ளைக்கு இரங்காமல்
பாலகனை மறப்பாளோ
அவள் மறந்து போனாலும்
நான் உன்னை மறப்பதில்லை சீயோனே
நான் உன்னை வெறுப்பதில்லை சீயோனே - நிர்மூலமாக்கினவர் பாழாக்கினவரெல்லாம்
உன்னை விட்டு புறப்பட செய்வேன் சீயோனே-உன்னை – 2
வனாந்திரம் எல்லாமே வயல்வெளியாய் மாறிடுமே
பாழான தேசமெல்லாம் குடிகளாலே நிரம்பிடுமே
உன்னை என்றும் வெறுத்திடமாட்டேன் சீயோனே – 2 - எழும்பு எழும்பு சீயோனே
வல்லமையை தரித்துக்கொள்
தூசியை உதறிவிட்டு எழும்பிடு – 2
அலங்கார வஸ்திரத்தை உடுத்திக்கொள் சீயோனே
உன் இராஜா நடுவினிலே எப்போதும் இருக்கையிலே
இனி நீ தீங்கை காண்பதில்லையே – 2
Nee Ennal Marakkapaduvathillai
Unnai Endrum Kaividavae Mattaen
Ullangkaiyil Unnai Varainthaenae
Enthan Kaiyil Raja Mudi Neeyae
Enthan Karathil Alangara Greedam
En Zionnae Zionnae
Unnai Marappaeno Marappathillai – 2
En Kaiyilirunthu Oruvanum Unnai
Parikka Vidamattaen
Theengu Seiya Oruvanum Un Mel
Kai Poduvathillai – 2
- Karthar Ennai Kaivittar
Aandavar Maranthu Vittar
Endru Pulambi Sollugindra Zionae – 2
Thayanaval Pillaiku Irangamal
Balaganai Marappalo
Aval Maranthu Ponalum
Naan Unnai Marappathillai Zionae
Naan Unnai Veruppathillai Zionae - Nirmoolam Akkinavar Pazhakinavar Ellam
Unnai Vittu Purapada Saivaen Zionae –Unnai – 2
Vananthiram Ellamae Vayalveliyai Maaridumae
Pazhana Dhesamellam Kudigalalae Nirambidumae
Unnai Endrum Veruthidamattaen Zionae – 2 - Yezhumbu Yezhumbu Zionae
Vallamayai Tharithukkol
Thoosiyai Utharivittu Yezhumbidu – 2
Alangara Vasthirathai Uduthikkol Zionae
Un Raja Naduvinilae Yeppothum Irukkaiyilae
Eni Nee Theengai Kanbathillaiyae – 2
Leave a Reply
You must be logged in to post a comment.