ஒன்றுமில்லப்பா நான் வெறுமையான பாத்திரம்
உம்மை தான் நம்பி வாழ்கிறேன்
கரங்களில் பொறித்தவரே
தோளில் சுமக்கின்றிரே அனாதையாவதில்லை
மறக்கப்படுவதும் இல்லை
1.அலைகள் சூழ்ந்த போதும்
மூழ்கி போகவில்லை
அக்கினி சூழ்ந்த போதும்
எரிந்து போகவில்லை
திராணிக்கு மேலாகவே
சோதிக்க விடவில்லையே (என்னை)
2.உண்மை நம்பின யாரும்
வெட்கமாய் போனதில்லை
உண்மை தேடின யாரும்
கைவிடப்படுவதில்லை
வார்த்தையில் உண்மையுள்ள
தெய்வம் நீர் மாத்திரமே
3.அழைப்பும் பெரிதானதே
தரிசனம் தந்தவரே
ஊழிய பாதையிலே
சித்தம் நிறைவேற்றுமே
சிலுவை சுமந்தவனாய்
உண்மையே பின்செல்லுவேன்
Leave a Reply
You must be logged in to post a comment.