- ஸ்தோத்திரம் இயேசு நாதா
உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில்! - வான துதர் சேனைகள்
மனோகர கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு! - இத்தனை மகத்துவமுள்ள
பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்! - நின் உதிரமதினால்
திறந்த நின் ஜீவப் புது வழியாம்
நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்! - இன்றைத் தினமதிலும்
ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே! - நீரல்லால் எங்களுக்குப்
பரலோகில் யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே!
- Sthoththiram Yesu Naathaa
Umakkentum Sthoththiram Yesu Naathaa
Sthoththiram Seykirom Ninnatiyaar
Thiru Naamaththin Aatharavil! - Vaana Thuthar Senaikal
Manokara Geethangalaal Eppothum
Oyvintip Paatith Thuthikkap Perum
Mannavanae Umakku! - Iththanai Makaththuvamulla
Pathavi Ivvaelaikal Engalukku
Eththanai Maathayavu Nin Kirupai
Eththanai Aachchariyam! - Nin Uthiramathinaal
Thirantha Nin Jeevap Puthu Valiyaam
Nin Atiyaarkkup Pithaavin Sannithi
Seravumae Santhatham! - Intaith Thinamathilum
Orumiththukkooda Um Naamaththinaal
Thantha Nin Kirupaikkaay Umakkentum
Sthoththiram, Sthoththiramae! - Neerallaal Engalukkup
Paralokil Yaarunndu Jeevanaathaa
Neeraeyanti Ikaththil Vaeroru
Thaettamillai Paranae!
Leave a Reply
You must be logged in to post a comment.