தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை, கிருபை தாருமே
- தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ்நாள் எல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்யக் கிருபை தாருமே – தம் கிருபை - நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை
நீசன் என் பாவம் நீங்கினதே
நித்திய ஜீவன் பெற்று கொண்டேன்
காத்துக் கொள்ள கிருபை தாருமே – தம் கிருபை - தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபை
மனம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீன சரீரத்திலும்
போதுமே உம் கிருபை தாருமே – தம் கிருபை - மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை
மூடும் திரை கிழிந்திடவே
தைரியமாய்ச் சகாயம் பெற
தேடி வந்தேன் கிருபை தாருமே – தம் கிருபை - ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியம் உம் கிருபை
என்றும் மறவேன் வாக்குத்தத்தம்
நீதியுமே சமாதானமுமே
நிலை நிற்கும் கிருபை தாருமே – தம் கிருபை - ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை
ஆத்தும பாரம் கண்ணீரோடே
சோர்வின்றி நானும் வேண்டிடவே
ஜெப வரம் கிருபை தாருமே – தம் கிருபை - கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை
காத்திருந்தே அடைந்திடவே
இயேசுவே உம்மைச் சந்திக்கவே
இரக்கமாய்க் கிருபை தாருமே – தம் கிருபை
Tham kirubai peridhalloa
Em jeevanilum adhae
Immattum kaaththadhuvae
Innum thaevai, kirubai thaarumae
- Thaazhmai ullavaridam thangidudhae kirubai
Vaazhnaal ellaam adhu poadhumae
Sugamudan tham belamudan
Saevai seiyya kirubai thaarumae – Tham kirubai - Nirmoolamaagaadhadhum nirpadhumoa kirubai
Neesan en paavam neenginadhae
Niththiya jeevan petru kondaen
kaaththu kolla kirubai thaarumae – Tham kirubai - Dhinam adhikaalaiyil thaedum pudhukirubai
Manam thalarndha naeraththilum
Belaveena sareeraththilum
Poadhumae um kirubai thaarumae – Tham kirubai - Maa parisuththa sthalam kandadaivaen kirubai
Moodum thirai kizhindhidavae
Dhairiyamaai sagaayam pera
Thaedi vandhaen kirubai thaarumae – Tham kirubai - Ondrai ondru sandhikkum saththiyam um kirubai
Endrum maravaen vaakkuththaththam
Needhiyumae samaadhaanamumae
Nilai nirkum kirubai thaarumae – Tham kirubai - Sthoaththira jebaththinaal perugudhae kirubai
Aathuma baaram kanneeroadae
Soarvindri naanum vaendidavae
Jeba varam kirubai thaarumae – Tham kirubai - Karththar velippadum naal aliththidum kirubai
Kaathirundhae adaindhidavae
Yaesuvae ummai sandhikkavae
Irakkamaai kirubai thaarumae – Tham kirubai
Leave a Reply
You must be logged in to post a comment.