ஆண்டவரின் திருமகனே aantavarin thirumakane

ஆண்டவரின் திருமகனே இயேசு என்ற
உண்மைதனை அறிவித்த அடையாளம்
ஏராளம் அந்த அடையாளம் கண்டு
கொண்டு அவர் வழியில் செல்வது தான்
(இயேசு) திருசபையில் நாம்
காணும் வாழ்வாகும்

கானானூர் கல்யாணத்தில் தண்ணீரை
திரட்சை ரசம்ஆகியதே
அற்புதத்தில் முதலாகும் அன்று
கப்பற் நகர் அதிகாரி மகன் உயிரை
மீட்டுத்தந்த கர்த்தர் என்னும்
அடையாளம் இரண்டாகும்
முப்பத்தெட்டு ஆண்டுகளாய்
முடியாத நோய் தீர்த்த
எருசலேமின் அருட்செயலே மூன்றாகும்
வெறும் அப்பம் ஐந்து ஈணிரண்டில்
ஐயாயிரம் பேர உண்ட கலிலேயா
அருள் நிகழ்ச்சி நான்காகும்

கடல் மீது நடந்து வந்து
கடும் புயல் தானடக்கி
கனிவோடு காத்த செயல் ஐந்தாகும்
ஒரு குருடனுக்கு பார்வை தந்து
உலகின் ஒளி அவரே என
வெளியான தத்துவமே ஆறாகும்
இறந்து விட்ட லாசுருவை
எழுப்பியவர் இறைமகனே
என்பது தான் ஏழாகும் இன்னும்
எண்ணில்லா அற்புதத்தை
இவ்வுலகில் செய்து வைத்த
இயேசுவின் மேல் அன்பு
வைத்தால் நலமாகும்


aantavarin thirumakane iyesu enra
unmaithanai ariviththa ataiyalam
eeralam antha ataiyalam kantu
kontu avar vazhiyil selvathu than
iyesu thirusapaiyil nam
kanum vazhvakum

kananur kalyanaththil thannirai
thiratsai rasamaakiyathe
arputhaththil muthalakum anru
kappar nakar athikari makan uyirai
mittuththantha karththar ennum
ataiyalam irantakum
muppaththettu aantukalay
mutiyatha noy thirththa
erusalemin arutseyale munrakum
verum appam ainthu iinirantil
aiyayiram pera unta kalileya
arul nikazhssi nankakum

katal mithu natanthu vanthu
katum puyal thanatakki
kanivotu kaththa seyal ainthakum
oru kurutanukku parvai thanthu
ulakin oli avare ena
veliyana thaththuvame aarakum
iranthu vitta lasuruvai
ezhuppiyavar iraimakane
enpathu than eezhakum innum
ennilla arputhaththai
ivvulakil seythu vaiththa
iyesuvin mel anpu
vaiththal nalamakum