எங்கள் பரலோக Engkal paraloka

எங்கள் பரலோக நன்னாடு பரன்
இயேசுவின் பொன் வீடு
தூதரோடு கூடி துதி கீதம் பாடி
துயரின்றி வாழும் தூய நாடு

கர்த்தர் இயேசு கிறிஸ்து அன்றி அங்கு
கணக்கற்ற தெய்வங்கள் இருபதில்லை
விக்ரக உருவ சிலை வணக்கம் அந்த
விண்ணக தேசத்தில் நடப்பதில்லை
இயேசுவின் திருநாம மகிமை ஒன்றே அங்கு
எங்கெங்கும் ஓங்கி ஒலிக்கும் நாடு
ஏழாம் நாளாம் ஓய்வு நாளில்
இயேசுவை எல்லோரும் துதிக்கும் நாடு

பெற்று வளர்த்த தாய் தந்தையை மதியா
பிள்ளைக்கு அங்கு இடமில்லை
பொய் கொலை களவு விபசாரம் செய்யும்
புல்லர்கள் அங்கு செல்வதில்லை
மாற்றான் மனைவியை இச்சிக்கும் மதிகெட்ட
துர் மார்க்கர் அங்கு இருப்பதில்லை
மாதேவன் இயேசு வகுத்திட்ட வழியில்
வாழ்ந்திட்ட மனிதர்கள் வாழும் நாடு


engkal paraloka nannatu paran
iyesuvin pon vitu
thutharotu kuti thuthi kitham pati
thuyarinri vazhum thuya natu

karththar iyesu kiristhu anri angku
kanakkarra theyvangkal irupathillai
vikraka uruva silai vanakkam antha
vinnaka thesaththil natappathillai
iyesuvin thirunama makimai onre angku
engkengkum oongki olikkum natu
eezham nalam ooyvu nalil
iyesuvai ellorum thuthikkum natu

perru valarththa thay thanthaiyai mathiya
pillaikku angku itamillai
poy kolai kalavu vipasaram seyyum
pullarkal angku selvathillai
marran manaiviyai issikkum mathiketta
thur markkar angku iruppathillai
mathevan iyesu vakuththitta vazhiyil
vazhnthitta manitharkal vazhum natu