என்னென்று அறியார் – மண்ணோர் செய்த பாவம்
மன்னியப்பா வென்ற – மத்தியஸ்தனைப் பார்க்க – வாரீரோ
அன்று கள்ளனோடு – இன்று பரதீசில்
வந்திடுவாய் என்ற – வல்லவனைக் காண – வாரீரோ
இவனுன்சேய் என்றும் – அவளுன் தாய் என்றும்
புவிவாழ்வீரென்ற – புண்ணியனைப் பார்க்க – வாரீரோ
ஒன்னாரைக்கைவிட – எண்ணமில்லா நாதன்
என்னையேன் கைவிட்டீர் – என்ற உரை கேட்க – வாரீரோ
தேவ கோபமூண்டு – ஏகன் நா வறண்டு
தாகமானேன் என்று – சாற்றினதைக் கேட்க – வாரீரோ
ஏவை வினைதீர – தேவ நேய மேற
யாவும் முடிந்தது – என்ற வாக்கைக் கேட்க – வாரீரோ
அப்பன்வசந்தீறாய் -இப்போதாவி நேராய்
ஒப்புவித்தேன் என்ற – ஓசையுரை கேட்க – வாரீரோ
En-entru ariyaar – Mannor seitha paavam
manniyappa ventra mathiyasthanai parkka – vaareero
Antru kallanodu – intru paratheseil
vanthiduvai entra – vallavanai kaana – vaareero
evanun sei entrum – avalun thaai entrum
poovi vazh veerntra – punniyanai parkka – vaareero
Deva kopamundu – Aegan Naa vaarandu
Thagamaanean entru – saattrinathai ketka – vaareero
Aaevai vinaitheera – deva neya meara
yaavum mudinthu – entra vaakkai ketka – vaareero
Appan vasantheerai – ippothaavi nearai
oppuvithean entra – oosaiura ketka – vaareero