என்னையாளும் இன்ப நாதனே என்
இயேசு மணாளனே –
துணையாரும் இல்லை என்று
மனம் நொந்து போனேன்
துணையாக வந்து தோள் தந்து என்னை
மீட்ட தேவனே – என்னையாளும்
மனம் நொந்து வாடினேன் திரு பாதம் தேடினேன்
தினம் கண்ணீர் சிந்தினேன் முழங்காலில் தங்கினேன்
அழும் என்னை தேடி வந்து அணைத்து அன்பில் ஆழ்த்தினார்
புழு என்னை தொட்டு தன் போல் புது ரூபம் ஆக்கினார்
கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள்
முரடான காடுகள் முள் கல் பாதைகள்
அவமான நிந்தைகள் எவை வந்த போதிலும்
இது எந்தன் பாக்கியம் என சொன்ன இயேசுவே
கடன்காரன் ஆனதால் உடன் வந்த பாடுகள்
இடம் மாறி போயினும் தடுமாற செய்திடும்
தடுமாறும் கால்கள் உம் முன் தள்ளாடலாகுமா
தள்ளாடும் என்னை தாங்கி நில் என்ற இயேசுவே
ennaiyalum inpa nathane en
iyesu manalane
thunaiyarum illai enru
manam nonthu ponen
thunaiyaka vanthu thol thanthu ennai
mitta thevane ennaiyalum
manam nonthu vatinen thiru patham thetinen
thinam kannir sinthinen muzhangkalil thangkinen
azhum ennai theti vanthu anaiththu anpil aazhththinar
puzhu ennai thottu than pol puthu rupam aakkinar
karatana metukal katum pallaththakkukal
muratana katukal mul kal pathaikal
avamana ninthaikal evai vantha pothilum
ithu enthan pakkiyam ena sonna iyesuve
katankaran aanathal utan vantha patukal
itam mari poyinum thatumara seythitum
thatumarum kalkal um mun thallatalakuma
thallatum ennai thangki nil enra iyesuve