கல்வாரி மலைதனிலே கர்த்தர் சிலுவைக் கண்டு
கண்ணீர் பெருகுதையா – அவர்
உயர சிலுவையில் உரைத்த பொன் வார்த்தைகள்
உள்ளத்தை உடைக்குதையா
இந்நிலத்தில் தம்மைக் கொலை செய்வாரையும்
இரங்கி மன்னிப்பார் உண்டோ – 2
பிதாவே இவர்கட்கு மன்னியும் என்றுமே
பாதகர்க்காய் வேண்டினார் -2
காயங்கள் ரத்தத்தை கொட்ட கண் மங்கிட
களைந்த நிலையில் கர்த்தர் -2
பார்த்துமே கள்வனை இன்று என்னுடனே
பரதேசில் இருபாய் என்றார்-2
சிந்தும் ரத்தவெள்ள சிலுவையில் தொங்கிடும்
சீராளன் தாயைப் பார்த்தார் – 2
பாசக் கண்களோடு பார்த்துமே யோவனை
பார் உந்தன் தாயை என்றார் -2
என் தேவனே என் தேவனே ஏன் என்னைக்
கைவிட்டீர் என்றுரைத்தார் – 2
தாகமாய் இருக்கிறேன் என்றவர் கூறவே
சேவகன் காடி கொடுத்தான் – 2
எல்லாம் முடிந்தது என்று சத்தமிட்டார்
பொல்லாதார் மீட்படைய -2
உம்முடையக் கைகளில் எந்தன் ஆவியை
ஒப்பு விக்கின்றேன் என்றார் – 2
Kalvari Malaithanile
Karthar Siluvai Kandu
Kanner Peruguthaiyya
Kanner Peruguthaiyya
Avar Uyara Siluvaiyil
Uraitha Pon Vaarthaigal
Ullathai Udaikkuthaiyya
Ullathai Udaikkuthaiyya
Innilathil Thammai
Kolai Seivaarai
Irangi Mannippaarundo
Pithaave Ivargatkku
Manniyum Endrume
Paathagarkkai Vendinaar
Kaayangal Raththathai
Kotta Kan Mangida
Kalaintha Nilaiyil Karthar
Paarthume Kalvanai
Indru Ennudane
Paradesil Iruppai Endraar
Sinthum Raththa Vella
Siluviayil Thongidum
Seeralan Thayai Paarthaar
Paasa Kannaglode
Paarthume Yovanai
Paar Untha Thaaiyai Endraar
En Devane… En Devane …
Yen Ennai Kaivitteer Endruraithaar ?
Thagamai Irukkindren Endravar Kurave
Sevagan Kaadi Koduthaan
Ellam Mudinthathu
Endru Sathamittar
Pollathaar Meetpadaiya
Ummudiya Kaigalil
Enthan Aaviyai
Oppuvikiren Endraar