சப்தமாய்ப் பாடி சத்துருவை Sapthamayp pati saththuruvai

சப்தமாய்ப் பாடி சத்துருவை
சங்கிலியால் கட்டுவோம்
நித்தம் நித்தம் கர்த்தர் நாமம்
பாடி உயர்த்திடுவோம்

இராஜா இயேசு ஜீவிக்கின்றார்
இரத்தம் சிந்தி ஜெயம் தந்தார்

புதுப்பாடல் பாடி மகிழ்வோம்
புனிதர்கள் சபையிலே
துதிபலி எழும்பட்டும்
ஜெயக்கொடி பறக்கட்டும்
எழுப்புதல் தேசத்தில்
பொழுதுபோல் உதித்தது

உண்டாக்கினாரே நம்மை
உள்ளம் மகிழட்டும்
ஆளுநர் அவர்தானே
இதயம் துள்ளட்டும்
எழுப்புதல் தேசத்தில்
பொழுதுபோல் உதித்தது

தமது ஜனத்தின்மேலே
பிரியம் வைக்கின்றார்
வெற்றி தருகிறார்
மேன்மைப்படுத்துவார்
எழுப்புதல் தேசத்தில்
பொழுதுபோல் உதித்தது

கர்த்தரை உயர்த்தும் பாடல்
(நம்) வாயில் இருக்கட்டும்
வசனம் என்ற போர்வாள்,
(நம்) கையிலே இருக்கட்டும்
எழுப்புதல் தேசத்தில்
பொழுதுபோல் உதித்தது


Sapthamayp pati saththuruvai
sangkiliyal kattuvom
niththam niththam karththar namam
pati uyarththituvom

iraja iyesu jivikkinrar
iraththam sinthi jeyam thanthar

puthuppatal pati makizhvom
punitharkal sapaiyile
thuthipali ezhumpattum
jeyakkoti parakkattum
ezhupputhal thesaththil
pozhuthupol uthiththathu

untakkinare nammai
ullam makizhattum
aalunar avarthane
ithayam thullattum
ezhupputhal thesaththil
pozhuthupol uthiththathu

thamathu janaththinmele
piriyam vaikkinrar
verri tharukirar
menmaippatuththuvar
ezhupputhal thesaththil
pozhuthupol uthiththathu

karththarai uyarththum patal
nam vayil irukkattum
vasanam enra porval
nam kaiyile irukkattum
ezhupputhal thesaththil
pozhuthupol uthiththathu