சிலுவையின் நிழலில் தங்கி நான்
என்றும் இளைப்பாறுவேன்
தங்கிடுவேன் தாபரிப்பேன்
கல்வாரி நேசரின் பாதத்திலே
சிலுவையில் இயேசுவை நான் காணும் நேரமெல்லாம்
சிந்தித்தென் ஜீவியத்தை சீர்செய்குவேன்
அங்கமெல்லாம் அடிபட்டு தொங்குகிறார் இயேசுவே
தூயனாய் என்னையும் மாற்றிடவே – சிலுவையின்
அகோரப் பாடுகளால் அந்தக்கேடடைந்தவராய்
என் பாவம் போக்க ஜீவன் ஈந்தவரே
எண்ணில்லா அன்பினையே என்னுள்ளம் நினைக்கையிலே
ஒப்புவித்தேன் என்னைச் சுத்தனாக்கும் -சிலுவையின்
கொல்கொதா நாயகரின் கொடூர மரணமதை
தியானித்தென் ஓட்டமதை ஓடிடுவேன்
மூன்றாணி மீதினில் கள்வரின் மத்தியிலே
முள்முடி சூடினார் எனக்காகவே – சிலுவையின்
தாங்கொண்ணா வேதனை சுற்றி வதைத்தநேரம்
தாசனாம் எந்தனுக்காய் ஏற்றவரே .
சிலுவை மரணமோ கொடியதோர் வேதனை
எப்படிப் போற்றுவேன் என் இயேசுவை – சிலுவையின்
கல்வாரி அன்பினால் கழுவி எந்தனை நீர்
கறைதிரை அற்றோனாய் மாற்றினீரே
எக்காளச் சத்தத்தைக் கேட்டிடும் நாளிலே
கர்த்தராம் இயேசுவை சந்திப்போமே – சிலுவையின்
Siluvaiyin nilalil thangi naan
Endrum ilaipaaruvein
Thangiduvein thaabaripein
Kalvari neisarin paadhathilay
Siluvaiyil Yesuvai naan kaanum neramellaam
Sindhithen jeeviyathai seer seiguvein
Angamellaam adipattu thongugiraar Yeisuvay
Thooyanaai ennaiyum maatridavay
Agoara paadugalaal andha keidadaindhavaraal
En paavam pokka jeevan eendhavaray
Ennilla anbinaiyay ennullam ninaikaiyilay
Oppuvithein ennai suthanaakum
Golgotha naayagarin kodoora maranamadhai
Dhyaanithen ottamathai oadiduvein
Moondraanni meedhinil kalvarin mathiyilay
Mulmudi soodinaar enakaagavay
Thaangonna veidhanai sutri vadhaitha neram
Dhaasanaam endhanukkaai eitravaray
Siluvai maranamo kodiyadhoar veidhanai
Eppadi poatruvein en Yeisuvai
Kalvari anbinaal kaluvi endhanai neer
Karai thirai atroanaai maatrineeray
Ekkaala sathathai keitidum naalilay
Kartharaam Yesuvai sandhippoamay