சொல்லத் துணிந்தேன் Sollath thuninthen

சொல்லத் துணிந்தேன் அப்பா என்று
உம் பின் செல்லப் பணிந்தேன்
உம்மை கண்டு ஆமென்
அப்பா இயேசப்பா என்று சொல்லுவேன்
உலகை வெல்லுவேன்

யோவான் எழுதிய சுவிஷேசம் அதில்
ஒன்று பன்னிரெண்டாம் திருவசனம்
இயேசுவின் நாமத்தில் விசுவாசம் அது
எல்லார்க்கும் பிள்ளையாகும் அதிகாரம் அந்த
அதிகாரம் தனை பெற்ற பிள்ளையாய்
உம்மை அப்பா என்று
அழைக்கும் புத்திரனாய்

காணும் உலக இன்ப காட்சி யாவும்
கானல் நீராக போச்சு
நானும் எனது என்ற பேச்சு எல்லாம்
வீணும் விருதாய் ஆச்சு இந்த
மாய உலகத்தை மறந்தே இயேசு
மாதேவனின் பாதம் பணிந்தேன்

மாளும் மாந்தரின் வீழ்ச்சி யாவும்
மா பாதகன் சாத்தான் சூழ்ச்சி
மா தேவா நின் பெரும் ஆட்சி நான்
மனிதனாய் நிலை நிற்கும் சாட்சி
என்றும் சாட்சியின் பிள்ளையாய் வாழ
உந்தன் மோட்ச வாழ்வினில் தனில் சேர


sollath thuninthen appa enru
um pin sellap paninthen
ummai kantu aamen
appa iyesappa enru solluven
ulakai velluven

yovan ezhuthiya suvishesam athil
onru pannirentam thiruvasanam
iyesuvin namaththil visuvasam athu
ellarkkum pillaiyakum athikaram antha
athikaram thanai perra pillaiyay
ummai appa enru
azhaikkum puththiranay

kanum ulaka inpa katsi yavum
kanal niraka possu
nanum enathu enra pessu ellam
vinum viruthay aassu intha
maya ulakaththai maranthe iyesu
mathevanin patham paninthen

malum mantharin vizhssi yavum
ma pathakan saththan suzhssi
ma theva nin perum aatsi nan
manithanay nilai nirkum satsi
enrum satsiyin pillaiyay vazha
unthan motsa vazhvinil thanil sera