நன்றி சொல்லி துதிப்பேன் Nandri Solli Thuthipen

நன்றி சொல்லி துதிப்பேன்
நாளெல்லாம் பாடுவேன்
நல்லவரே நீர் செய்த
நன்மைகளை நினைத்தே

உம் திரு இரத்தத்தால் எந்தனை கழுவி
உம்முடனே என்னை அமர செய்தீர்

வாழ்நாளெல்லாம் உம்மில் களிகூர்ந்து மகிழ
கிருபைகளால் தினம் முடிசூட்டினீர்

எதிரியின் கண்முன் விருந்தொன்று செய்தீர்
புது எண்ணெயால் என்னை அபிஷேகித்தீர்

ஏழை என் ச்த்தம் நித்தமும் கேட்டீர்
என் பயம் யாவும் நீக்கி விட்டீர்

ஆகாரம் தந்தீர் ஆடைகள் அளித்தீர்
ஆதரித்தீர் என்னை அனுதினமும்

எப்படி நான் மறப்பேன் அப்பா உம்மன்பை
கண்ணீருடன் தினம் நன்றி சொல்வேன்


Nandri Solli Thuthipen
Nalelam Paduven
Nalavarea Neer Seitha
Nanmaigalai Ninaithea

Um Thiru Rathathal Enthanai Kazhuvi
Ummudane Ennai Amara Seitheer

Vazhnalelam Ummil Kalikurnthu Magizha
Kirubaikalal Thinam Mudisoodineer

Ethiriyin Kanmun Virunthonru Seitheer
Pudhu Enaiyal Ennai Abishekitheer

Ezhai En Satham Nithamum Keateer
En Payam Yaavum Nikki Viter

Agaram Thantheer Adaikal Alitheer
Atharithir Ennai Anuthinamum

Eppadi Naan Marapen Appa Um Anbai
Kaneerudan Dhinam Nandri Soluven