நல்லதாக முடிவதெல்லாம் Nallathaka mutivathellam

நல்லதாக முடிவதெல்லாம் கடவுள் கட்டளை
இங்கு நடப்பதெல்லாம் பரம பிதா நடத்தும் ஒரு நிலை
அல்லல் உற்ற நெஞ்சங்களில் அமைதி பொழிந்தார்
அங்கு அடிமையான மக்களுக்கு விடுதலை தந்தார்

நாதியற்ற மக்களுக்கோர் நாடு கிடைத்தது சிலர்
நல்வழியை மறந்ததினால் அல்லல் நேர்ந்தது
சாலமோனின் தாவீதின் ஆட்சி அமைந்தது
அருள் சந்ததியால் ஆண்டவரின் பாதை தெரிந்தது

கர்த்தரிடம் நம்பிக்கை தான் வாழ்வின் இன்பமே அது
கடுகளவு குறைந்தாலும் துன்பம் தொடருமே
எசேக்கேலும் தானியேலும் எடுத்துச் சொன்னாரே
அதை எச்சரிக்கை உணர்ந்த மக்கள் நலமடைந்தாரே

பரிசுத்த கூடாரம் தேவன் ஆலயம் அது
பழையதாகி நிலைத்து மீண்டும் புதியதானதே
திருப்பாடல் சங்கீதம் தெய்வப்பாடலே அதை
தினம் பாடி துதிப்பது நம் வாழ்வின் கடமையே


Nallathaka mutivathellam katavul kattalai
ingku natappathellam parama pitha nataththum oru nilai
allal urra nenysangkalil amaithi pozhinthar
angku atimaiyana makkalukku vituthalai thanthar

nathiyarra makkalukkor natu kitaiththathu silar
nalvazhiyai maranthathinal allal nernthathu
salamonin thavithin aatsi amainthathu
arul santhathiyal aantavarin pathai therinthathu

karththaritam nampikkai than vazhvin inpame athu
katukalavu kurainthalum thunpam thotarume
esekkelum thaniyelum etuththus sonnare
athai essarikkai unarntha makkal nalamatainthare

parisuththa kutaram thevan aalayam athu
pazhaiyathaki nilaiththu mintum puthiyathanathe
thiruppatal sangkitham theyvappatale athai
thinam pati thuthippathu nam vazhvin katamaiye