வாருங்க என் நேசரே Varungka en nesare

வாருங்க என் நேசரே
வயல்வெளிக்குப் போவோம் அங்கே
என் நேசத்தின் உச்சிதங்களை
உமக்குக் கனியாய் கொடுப்பேன்

ஆராதனையில் கலந்து கொள்வேன்
அபிஷேகத்தால் நிறைந்திடுவேன்
உம்மை துதித்து துதித்து
தினம் பாடி பாடி தினம்
நடனமாடி மகிழ்வேன்

நேசத்தால் சோகமானேன் உம்
பாசத்தால் நெகிழ்ந்த போனேன்
உம் அன்புக் கடலிலே
தினமும் மூழ்கியே
நீந்தி நீந்தி மகிழ்வேன்

நீர் செய்த நன்மைகட்காய்
என்ன நான் செலுத்திடுவேன்
இரட்சிப்பின் பாத்திரத்தை
என் கையில் ஏந்தி இரட்சகா
உம்மை தொழுவேன்


Varungka en nesare
vayalvelikkup povom angke
en nesaththin ussithangkalai
umakkuk kaniyay kotuppen

aarathanaiyil kalanthu kolven
apishekaththal nirainthituven
ummai thuthiththu thuthiththu
thinam pati pati thinam
natanamati makizhven

nesaththal sokamanen um
pasaththal nekizhntha ponen
um anpuk katalile
thinamum muzhkiye
ninthi ninthi makizhven

nir seytha nanmaikatkay
enna nan seluththituven
iratsippin paththiraththai
en kaiyil eenthi iratsaka
ummai thozhuven