வாரும் நாம் எல்லோரும் கூடி
மகிழ் கொண்டாடுவோம்
சற்றும் மாசில்லா நம் இயேசு நாதரை
வாழ்த்திப் பாடுவோம்
மகிழ் கொண்டாடுவோம் (2)
தாரகம் அற்ற ஏழைகள்
தழைக்க நாயனார்
இந்தத் தாரணியிலே
மனுடவ தாரம் ஆயினார்
மா பதவியை இழந்து
வறியர் ஆன நாம் – அங்கே
மாட்சி உற வேண்டியே
அவர் தாழ்ச்சி ஆயினார்
ஞாலமதில் அவர்க்கிணை
நண்பர் யாருளர் – பாரும்
நம் உயிரை மீட்கவே
அவர் தம் உயிர் விட்டார்
மா கொடிய சாவதின்
வலிமை நீக்கியே இந்த
மண்டலத்தி னின்றுயிர்த்தவர்
விண்டலஞ் சென்றார்
warum namm yellorum kudi
magil kondaduvom
satrum massilaa naam yesuu natharee
valthii paduvoom
magil kondaduvom
tharegam attree yelaigal
thalaike nayanarr
inthat thraniyilee
manudav tharm ayinar
maa pataviyai elathuu
vatriyarr aann naamm – angu
mmathi urai vandiye
avvar thalthi ayinaar
nyanemathi avarkinaii
nanbar yarulaar – parum
naam uyraii miitkave
avar tham uyir vittar
maa kodiye savthin
valimai niikkiyee inthhe
mandalathindru yirthavar
vindang sendrar